• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் பகுதி உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

ByKalamegam Viswanathan

Feb 9, 2023

திருமங்கலம் பகுதிகளில் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம், அப்பகுதியில் உள்ள உணவகங்கள், சிறு கடைகள் உள்ளிட்டவற்றை அதிகாரியின் மூலம் ஆய்வு நடத்தி, சம்பவ இடத்திலேயே உணவுகளை பரிசோதனை செய்து, உணவு பொருளில் ஏதேனும் ரசாயன கலப்படங்கள் கலந்து இருக்கிறதா? எனவும் , உடல் நலத்தை பாதிக்கும் வகையில் வேறு பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன? என்பது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டு, உடனடியாக அதற்கான அபராத தொகையும் , உரிமம் இன்றி நடத்தப்பட்டு வரும் உணவகங்களுக்கு அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக உணவு தர கட்டுப்பாட்டு பரிசோதனை ஆய்வாளர் கோவிந்தன் தெரிவித்தார்.