தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 26அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது
மதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடுநில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக நில அளவை களப்பணியாளர்களின் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நில அளவை அலுவலர்களின்தர்ணா போராட்டம் நடைபெற்றது.இதில் நில அளவை அலுவலர்கள் களப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும் நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கற்றுக் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்,நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப் பணியர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
.இந்த தர்ணா போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் மாவட்ட இணைச் செயலாளர் திவ்யாமாவட்டத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் ரகுபதி மாநில செயலாளர் முத்துமுனியாண்டி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் நீதிராஜா தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை புலஉதவியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் சரவணன் கோட்டை கிளை தலைவர் பிரேம்குமார் உட்பட நில அளவை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.தர்ணா போராட்டத்தில் தங்களது 26 ஆம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்