கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5. 30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் நெற்பயிர் கட்டுகளை கோவில் மேல்சாந்தி தலையில் சுமந்து அம்மன் முன் படைத்து பூஜைகள் செய்யப்பட்டன. குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பூஜையில் பங்கேற்றார். பின் நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் திருக்கோயில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
