• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நான்கு சட்டமன்றத் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என ஓ பன்னீர்செல்வம் பேச்சு..,

BySubeshchandrabose

Mar 20, 2026

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியம் பகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது

இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய பெருமை இந்த ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு உள்ளது

9 அமைச்சர்களை ஜெயலலிதா பொறுப்பிலிருந்து நீக்கிய போது நான் அவரிடம் பேசி அதை தடுத்து நிறுத்தினேன் ஆனால் அவர்களே ஒன்று சேர்ந்து என்னை கட்சியிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டபோது நான் மிகவும் மனம் வருத்தப்பட்டேன்

நான் ஆதரவு தெரிவித்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள் பதவியில் இருக்க முடிந்தது அந்த நன்றி கூட இல்லாமல் என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற செயலில் ஈடுபட்டார் அதை தான் நான் எதிர்த்தேன்

எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் அவரே (எடப்பாடி பழனிசாமி) முதலமைச்சராக இருக்கட்டும் என்று கூறினேன் ஆனால் வேலுமணி மற்றும் தங்கமணி கட்சி ஒருங்கிணைப்பாளராக நீங்கள் இருக்க வேண்டும் என கூறினார்கள் பின்னர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என தெரிவித்தனர்

எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பாற்றியது, கட்சியில் அவருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை ஒப்புக்கொண்டது தான் அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு

மக்களுக்கு என்ன தேவையோ நாட்டு வளர்ச்சிக்கு என்ன தேவையோ என்பதை அறிந்து தனது உடல் நலத்தை கூட பார்க்காமல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பணியாற்றிய விதம் இந்தியாவிலேயே தமிழகத்தை பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கின்றது

2019 ஆம் ஆண்டிலேயே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறுத்தப்பட்ட அம்மா லேப்டாப், தாலிக்கு தங்கம் ஆகிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்பை வழங்கி செயல்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்

தென் தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்த போது மு.க ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது, சட்ட ஒழுங்கு, சாதி பிரச்சனை என எந்த பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எல்லா தேவையும் பூர்த்தி செய்யக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின்

தமிழக வளர்ச்சி பணிக்கு 40 சதவீதம் வரவேண்டி உள்ள நிலையில் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமிழகம் தலை வணங்காது என தெரிவித்தார்

டெல்லியில் உள்ளவர்கள் இங்கு (தமிழகத்தில்) வந்து பேசுகின்ற நிலைமையை மாற்றி டெல்லி சென்று அவர்களை சந்தித்து அடிமையாகி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சித்தார்

தொடர்ந்து பேசிய அவர் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் வரவேண்டும் என தெரிவித்தார்.