அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, ‘ஓ மை டாக்’ படத்தை தன்னுடைய ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது.
சிம்பா என்ற ஒரு சிறு நாய்க் குட்டிக்கும், அர்ஜூன் என்ற சின்னப் பையனுக்கும் இடையிலான நட்பினை அழகான கதை, திரைக்கதையில் சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது.
ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள்.
இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் பாராட்டினைப்ப் பெற்று வருகிறது. அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.இந்த வியாழனன்று, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்தார்.
அதில் “ஒரு செல்லப் பிராணியின் காதலனாக, இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார், அதில் “மிக்க நன்றி!! நான் ஜான்டி ரோட்ஸின் பெரிய ரசிகன்..! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்!!” என்று சூர்யா பதில் அளித்துள்ளார்.
நடிகர் மகேந்திரன், இந்தப் படத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக இணைத்தது குறித்து தனது ஆச்சரியத்தையும், பாராட்டையும் விவரித்துள்ளார்.அதில் அவர் “#OhMyDog இந்த திரைப்படத்தில் #ஆர்ணவ்விஜய் நடிப்பை பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களை ஒன்றாக பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ அண்ணா. இந்த இதயப்பூர்வமான திரைப்படத்தை @PrimeVideoIN இல் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், தயாரிப்பாளர் S.R.பிரபுவும் இந்த கோடையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இணைத்து இப்படத்தை பார்த்து ரசிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தன் டிவீட்டர் பக்கத்தில் “#OhMyDog குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதைத் தவற விடாதீர்கள்!!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் பிரசாந்த் சோலங்கியும் படத்தைப் பார்ப்பதற்கான தனது எதிர்பார்ப்பை குறித்து எழுதினார்.
“இந்தப் பாதங்களுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது. ‘ஓ மை டாக்’ பார்க்க ஆவலாக உள்ளேன்!” என்று குறிப்பிட்டுள்ளார் சோலங்கி.
இந்த ‘ஓ மை டாக்’ படத்தினை ஜோதிகா-சூர்யா தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் S.R.ரமேஷ் பாபு இருவரும் RB டாக்கீஸ் சார்பில் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]