• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின கொண்டாட்டம்.

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் கொண்டாடினார்கள் ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. செவிலியர்கள் சேவையைப் போற்றும் வகையில் சர்வதேச செவிலியர் கவுன்சில் 1965 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடியது .அதற்குப் பிறகு 1974 ஆம் ஆண்டிலிருந்து மே 12ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக வாழ்ந்து ,மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் மே 12ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது . புகழ்பெற்ற செவிலியராக வழங்கியதோடு மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியாகவும், புள்ளியியல் அறிஞராக விளங்கினார். மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கிரிமியன் போரில் காயம் அடைந்தவர்களுக்கு அவர் இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்த காரணத்தினால் அவர் செவிலியர் தேவதையாக கொண்டாடப்படுகிறார். இந்த போரின் போது அவர் கடைபிடித்த நோயாளிகள் பராமரிப்பு சார்ந்த வழிமுறைகளும், நெறிமுறைகளும் இன்றளவும் மருத்துவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 

செவிலியர் பயிற்சி அளிப்பதிலும் முன்னோடியாக விளங்கினார். அவரது பிறந்த தினமான மே 12ஆம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜென்னி தலைமையில் ,  கூட்ட அரங்கில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது .இதில் மருத்துவமனையில் உள்ள அனைத்து செவிலியர்களும், பயிற்சி செவிலியர்களும் கலந்துகொண்டனர். அனைவரும் கையில் விளக்கேந்தி நைட்டிங்கேல் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு செவிலியர் தினத்தை கொண்டாடினார்கள்.நிகழ்ச்சியில் 'தென்கோடி தமிழகம் கண்டெடுத்த சிறந்த செவிலியர் விருது' சிறந்த செவிலியர்களுக்கு கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜென்னி அவர்களால் வழங்கப்பட்டது.