தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள டைமன் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டைமண்ட் பாண்டி செல்வம் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன், தொழிலதிபர் சி.பி.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்வியாளர் டாக்டர் ஸ்ரீ வாகினி கபில் வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் வீரலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி நாடார் உறவின் முறை கல்வி நிறுவனங்களின் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ,திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்க தலைவர் லட்சுமி வாசன், தேனி மாவட்ட தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மேலும் பல்வேறு போட்டிகளில், கலை நிகழ்ச்சிகளில், விழாக்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் எல்இடி திரையில் , லேசர் மின்னொளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஓரங்க நாடகம், கிராமிய கலைகள் ,ஆடல் பாடல், வரலாற்று சிறப்புமிக்க நாடகம், சிவ தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தத்துரூபமாக மாணவ மாணவிகள் செய்து காண்பித்தனர். விழாவில் ஏராளமான பெற்றோர் ,பொதுமக்கள் கலந்துகொண்டு ரசித்தனர். விழா முடிவில் எஸ்.பி .கபிலேஷ் கண்ணா நன்றி கூறினார் ,ஏற்பாடுகளை ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.