• Tue. Dec 10th, 2024

தேனி ஜிஹெச்சில் செவிலியர்கள் சினிமா பாடலுக்கு ஆட்டம்.
வைரலாகி வரும் வீடியோ.

ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின் போது சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும் செவிலியர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அமைந்துள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நுழையவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா காலம் என்பதால் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 170 க்கு மேற்பட்ட மருத்துவர்கள் 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையின் அலுவலகத்தில் பணியின் போது சினிமா பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் கண்காணிப்பாளர், ஆண் செவிலியர், பெண் செவிலியர் மருத்துவ பணியாளர் என ஐந்து நபர்கள் சமூக இடைவெளி இன்றி கை கோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடுகின்றனர்.

மருத்துவமனையில் பணியில் இருக்கும்போது செவிலியர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை பணியாளர்களிடம் விசாரித்த போது செவிலியர் கண்காணிப்பாளர் அறையில் அவ்வபோது இவ்வாறு நடணம் ஆடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.