• Mon. Mar 24th, 2025

சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீதாணுமாலைய சுவாமி கோயிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை…

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணு மாலைய சுவாமி கோயிலில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 11_உண்டியல்கள் 3-மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தினம் பக்த்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வாடிக்கை.

உள்ளூர் மக்கள் மட்டும் அல்லாது தினமும் பல நூறு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகிற கோவில். மக்கள் அளித்த காணிக்கைகள் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயிலில் உள்ள 11_உண்டியல்களும் திறந்து எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில், காணிக்கை பணம் எண்ணும் பணி தொடங்கியது.

உண்டியல் பணத்தை எண்ணும் பணியில், கோயில் ஊழியர்களுடன் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் தன்னால்வளர்கள் என உண்டியல் பணம் எண்ணும் பணி தொடங்கியது. பணத்தாழ்கள் , தனியாக பிரிப்பது. நாணயங்கள் அதன் வடிவத்திற்கு ஏற்ற அறிப்புகளில் இட்டு சல்லித்து எடுக்கப்படுகிறது.