• Sun. Mar 16th, 2025

குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த், மேயர் மகேஷ் பங்கேற்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா  இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக வழக்கம். நடப்பது இந்த ஆண்டு மாசிக்கொடை விழா வரும் மார்ச் 3ம் தேதி காலை திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நாட்டு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மேயர் மகேஷ், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரெத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டைக்காடு பஞ்சாயத்து தலைவர் ராணிஜெயந்தி, மண்டைக்காடு காங்கிரஸ் தலைவர் சுந்தர் ராஜ், கவுன்சிலர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.