• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!

திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது, கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும், திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.
நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .
திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரி
To
Sri Lord Venkateswara swamy,
The Executive Officer
TTD Administrative Building
K.T.Road
Tirupati – 517 501 Andhra Pradesh