இந்தியாவின் தென் கோடி சர்வதேச சுற்றுலா பகுதியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தும் குத்தகை காரர்களுக்கு கடைகளை உடனே அகற்று என நோட்டீஸ்.!

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்ட சபையில் இன்று வைத்த கோரிக்கை. அண்மையில் கன்னியாகுமரி அறநிலையத்துறை, கடந்த 50_ ஆண்டுகளுக்கு மேலாக தரை வாடகை உரிமையில். கடை கட்டி தொழில் செய்துவரும் நிலையில்,

கன்னியாகுமரி அறநிலையத்துறை எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி 24_ மணி நேரத்தில் கடையை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 243 _அறநிலையத்துறையின் இடத்தில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவை எதிர்த்து கடை அடைப்பு, கஞ்சி காய்ச்சும் போராட்டம் என தொடர்ந்த நிலையில்.
தளவாய் சுந்தரம் அவரது தொகுதியில் வசிக்கும் மக்களின் மீது அற நிலையத்துறை மற்றும் நகராட்சி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயம் வேண்டும் என. தளவாய் சுந்தரம் இன்று சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை. சட்டமன்ற தலைவர் அப்பாவும் ஆதரித்து. நியாயமான உதவிகள் செய்யுங்கள் என தளவாய் சுந்தரத்தின் கோரிக்கையை ஆதரித்து பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு சட்டத்திற்கு உட்பட்டு, அறநிலையத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து வியாபாரிகளுக்கு பாதிப்பு வராமல் நடவடிக்கை மேற்கொள்ள படும் என பதில் அளித்தார்.






