• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கட்டுமான ஒப்பந்தகாரர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

Byவிஷா

Feb 28, 2024

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, கட்டுமான ஒப்பந்தகாரர் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதத்தில் 50சதவீதம் உயர்ந்திருப்பதை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களும் அடங்குவர். இதனால் தமிழகத்தில் ரூ.2000 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பினர் கலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இத்தகைய விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் ஆகிய மூன்று சங்கத்தினர் இணைந்து இன்று அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஜல்லியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு யூனிட் ரூ.1700 க்கு விற்கப்பட்டது. மேலும் படிப்படியாக விலை உயர்ந்துவரப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதாவது முதல் வாரத்தில் 3200 ரூபாய் ஆக விலை அதிகரித்துள்ளது. இதே போன்று எம் சாண்ட், டி சாண்ட் ஆகியவற்றினுடைய விலையும் யூனிட்டிற்கு 2000 ரூபாய் அதிகரித்து சுமார் 60சதவீதம் அளவிற்கு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் 50 முதல் 60 சதவீத அளவிற்கான இழப்பு ஏற்படுவதாக கூறி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.