• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எனது அரசு அல்ல நமது அரசு மதுரையில் பெந்தகோஸ்தே மாநாட்டில் முதல்வர் பேச்சு

ByKalamegam Viswanathan

Feb 9, 2023

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.
இதில் 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றினார்.அப்போது பேசிய முதல்வர் கூறுகையில்:
என்னால் நேரில் வர இயலவில்லை காணொளி மூலமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மதுரைக்கே வந்தாலும் சென்னையில் இருந்தபடி பேசினாலும் என்றும் உங்களோடு இருப்பவன் உங்களில் ஒருவன் நான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே தூரம் அதிகமாக இருந்தாலும் அன்பு நம்மை இணைக்கிறது. நம்பிக்கை நம்மை இணைக்கிறது.சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை தான் சொல்ல முடியும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம், அனைவரிடம் சேர்ந்து வாழ்வதுதான் ஒற்றுமை, ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம், ஏழைக்கு குரல் கொடு என்பதுதான் நீதி மற்றவர்களுக்காக வாதாடு என்பதன் தியாகம், உன்னிடம் இருப்பதை இல்லாதவர்க்கு கொடு என்பதுதான் பகிர்தல் இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அது தான் சமத்துவ நாடாக அமையும்.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் நமது அரசு தனது நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் இது எனது அரசு அல்ல நமது அரசு உத்தரவிடுங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்றார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில்:
உங்களுடைய எண்ணங்களையும் உணர்கிறேன் புரிந்து முதல்வர் சொல்லியுள்ளார் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை நம் முதல்வர் எதெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நிறைவேற்றுவார், கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாவலனாக முதல்வர் என்றைக்கும் இருப்பார். மதவாதிகளினால் ஆபத்து வரும் என்று முதல்வர் சொன்னார். எக்காலத்திலும் முதல்வர் இருக்கும் வரை யாரும் உங்களை நெருங்க முடியாது. அவர் உங்களின் பாதுகாவலனாக இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த சிறுபான்மையினர் சமுதாயத்தின் பாதுகாவலனாக இருப்பார் என்றார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6000 மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பெந்தகோஸ்தே நான்காவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர்..