புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 15 வயது உள்ள ஒரு சிறுமி வேலை பார்த்து வந்திருக்கிறார். அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கோ மகேந்திரா கம்மங்கோ என்ற 23 வயது உடைய இளைஞரும் வேலை பார்த்து இருக்கிறார்.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக ஏற்பட்டதால் அந்தச் சிறுமி கர்ப்பமாகி இப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் அந்தச் சிறுமி தற்போது புதுக்கோட்டை அரசு ராணியார் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை கர்ப்பமாக்கிய மகேந்திரா கமாங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு அவரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு 15 நாள் சிறை காவலில் வைப்பதற்காக புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்ற போது ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மணமல்லி தலைமையிலான இரண்டு பெண் காவலர்களும் ஓர் ஆண் காவலரும் காவல்துறையில் வாகனத்தில் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.


அப்போது புதுக்கோட்டை மாவட்ட சிறை முன்புறமுள்ள உணவகத்தில் போலீசார் அவருக்கு பசி எடுக்கிறது என்று சொன்னதால் பசியாற செய்யும் விதமாக அங்கு அவரை உணவருந்த செய்திருக்கிறார்கள். கை கழுவும் நேரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் இருந்தவர்களை தட்டி விட்டு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலங்குடி காவல் துறையினர் குற்றவாளியை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 40 பட்டாலியன் போலீஸ் மற்றும் புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் பேரில் இந்த குற்றவாளியை பிடிப்பதற்காக 200 போலீசாரை வரவழைத்து இரவோடு இரவாக தப்பிச்சென்ற வட மாநில குற்றவாளியான மகேந்திரா கமாங்காவை விரைந்து பிடிக்கத் திட்டமிட்டு தொடர்ந்து தேடி வருகிறார்கள். நேற்று இரவு நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் இதுவரை குற்றவாளி சிக்கவில்லை.
அதனால் புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் லாரிகள் பேருந்துகள் சந்தைப்பேட்டை மற்றும் ரயில்வே நிலையங்களிலும் போலீசார் தேடி வருகின்றார்கள். தெருவிளக்கு மட்டுமல்லாது தெருவிளக்கு மட்டுமல்லாது டார்ச் லைட் உதவியுடன் எந்த இடத்தில் படுத்து இருந்தாலும் எங்காவது பதுங்கி இருந்தாலும் குற்றவாளியை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது காவல்துறைக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டு குற்றவாளிகள் எல்லாம் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் நிலையில் வட மாநில குற்றவாளியான மகேந்திரா கமாங்கா போலீசருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிச் சென்ற விஷயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றாலும் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.




