• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

25 வயது பூர்த்தியான வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..,

ByP.Thangapandi

Apr 6, 2026

உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்., – நேற்றோடு தனது 25 வது வயது பூர்த்தியான சூழலில் தமிழகத்திலேயே இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது.,

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அபிராமி, ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி., விவசாயிகளுக்கு உடனிருப்பதற்காக இந்த உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்., முக்கியமாக 58 ஆம் கால்வாய் பிரச்சனையை வந்த எல்லோருமே சரி செய்வதாக சொன்னார்கள் சரி செய்யவில்லை, விவசாயிகளுடன் நிற்பதற்காக வந்துள்ளேன்., கண்டிப்பாக முதல் பிரச்சனையாக 58 ஆம் கால்வாய் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்றும்.

சீமான் பெரியப்பா, சீமான் தாய்மாமா என சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு உள்ளது ஆதலால் இதற்கு முன் வெற்றி பெற்றவர்களை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும்.

வாக்காளராக இரண்டாவது முறையாக வாக்களிக்க உள்ளேன், இன்று வேட்பாளராக தமிழ்நாட்டின் பிரச்சனையை முன் எடுத்து வந்து நிற்கிறேன், தமிழ்நாட்டிலேயே சின்ன வேட்பாளர் என்பது பெருமையாக உள்ளது, அதும் நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன்.