• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லகிம்பூர் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை – உ.பி அரசு!..

Byமதி

Oct 6, 2021

வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

ஏற்கனவே லகிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் கலவரம் நடந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை. அதுமட்டுமின்றி லகிம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 144 தடையும், இணைய தொடர்பும் துண்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு லகிம்பூர் மாவட்டம் செல்ல திட்டமிட்டு இருப்பதாக உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியது. ஆனால், சிறிது நேரத்திலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோர் லகிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேச அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியாகவும் பொது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.