தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது.
மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மே 26 நாளை ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக இருக்கும். இதனை ஈடுசெய்யும் வகையில் இதற்கு ஈடாக மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மானிய விலையில் உணவுப்பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி மற்றும் பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு அதன் பிறகு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதே போல் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்தும் ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை
