• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நாளை ஆழியார் அணை, டாப்ஸிலிப் பகுதிக்கு செல்ல தடை

Byவிஷா

Apr 18, 2024

நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஆழியார் அணை, டாப்ஸிலிப் பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள் வாக்களிக்கும் வகையில், ஆழியார் அணை, டாப்ஸிலிப் பகுதிகளுக்கு செல்ல நாளை ஒரு நாள் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல வனத்துறை நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை வதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஆழியார் அணை பூங்காவுக்கு செல்லவும் பொது பணி துறையினர் தடைவிதித்துள்ளனர். டாப்ஸ்லிப் மற்றும் ஆழியார் பூங்கா பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள் வாக்களிக்கும் வகையில் டாப்ஸ்லிப் மற்றும் ஆழியார் அணை பூங்கா நாளை ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாகவும் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.