• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குழந்தை பெற்ற பிறகும் கிளாமரில் கலக்கும் நிஷாஅகர்வால்..!

Byவிஷா

Dec 22, 2021

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷாஅகர்வால் குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் படவாய்ப்புக்காக வெளியிட்டு வரும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இஷ்டம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா அகர்வால். நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான இவர், முதல் படத்திலேயே படுகவர்ச்சியாக நடித்திருந்தார். காஜல் அகர்வாலுக்கு போட்டியாக இவரும் சினிமாவில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஐக்கியமானார்.


திருமணத்துக்கு பின் ஓரிரு படங்களில் நடித்து வந்த நிஷா அகர்வால், குழந்தை பிறந்த பின்னர் சுத்தமாக நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இஷான் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை தற்போது வளர்ந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிகையாக களமிறங்க முடிவு செய்துள்ளார் போல இருக்கிறது. பட வாய்ப்புக்காக விதவிதமாக போட்டோஷட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டு வருகிறார் நிஷா அகர்வால். அந்த வகையில், தற்போது சேலையில் கவர்ச்சியாக போட்டோஷட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.