• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நிலக்கோட்டை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக் கூட்டம்..,

ByPuthar Pandian P

Mar 12, 2026

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாக கோரிக்கை முழக்க எழுச்சி பொதுக்கூட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது. இந்த பொதுககூட்டத்தில் கழகத்தின் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் பி.எஸ்.எ. மாதவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் அரசியலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகாரம் வழங்க வேண்டும், பொய்யான வழக்கு வன்கொடுமை சட்டம் கீழ் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை வலிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் சகாதேவன், மணிகண்டன்,
ஒன்றிய பொறுப்பாளர்கள் சங்கரபாண்டி, கதிரேசன், வடிவேல், வெற்றிவேல், சுந்தரம், சதீஷ்குமார், பிரவீன் தேவா, ரவிக்குமார்.பேரூர் கழகச் செயலாளர்கள் கணேசன், கருப்பையா, மணிராஜ், அழகு முருகன், கார்த்திக். தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் சென்றாயப்பெருமாள், லோகேஸ்வரன், கார்த்திகேயன், மற்றும் மாவட்ட ஒன்றிய கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.