திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. , அதிமுக வேட்பாளராக எஸ். தேன்மொழி சேகர் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரனிடம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது உடன் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், பெரம்பலூர் முன்னாள் எம்.பி மருதராஜா, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயப்ரகாஷ் உட்பட பலர் இருந்தனர், அதிமுக வேட்பாளர் எஸ் தேன்மொழி சேகருக்கு 80 லட்சத்து 50 ஆயிரம், அசையும் சொத்து 2 கோடியே 40 லட்சம், கடன் 84 லட்சம் கடன் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோன்று அவரது கணவர் சேகருக்கு அசையும் சொத்து 44 லட்சமும், அசையா சொத்து 11 கோடியே 41 லட்சமும், அவரது பெயரில் கடன் ஒரு கோடியே 14 லட்சம் இருப்பதாக மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து எஸ்.தேன்மொழி சேகரின், கணவர் வி.எஸ் .எஸ் .சேகர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோன்று மன்னவராதியைச் சேர்ந்த மனோகரன் முன்னாள் மின்சார வாரியத் துறையில் பொறியாளராக வேலை செய்தவர். நிலக்கோட்டையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



