• Tue. Feb 18th, 2025

ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு!

ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆந்திரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நேற்று ஆந்திரத்தில் ஒரேநாளில் 1,257 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.