• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொலைந்த செல்போன்களை கண்டறிய புதிய வலைத்தளம்

ByA.Tamilselvan

May 17, 2023

தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைத்தளம்
இன்று முதல் அமலுக்கு வந்தது!
காணாமல் போன மற்றும் திருடுப் போன செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமலுக்கு வந்துள்ளது.
தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்னை. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இது இன்று முதல் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். எனவே மொபைல் தொலைந்து விட்டால் சிஇஐஆர் இணைய சேவை மூலமாக மீட்க, புகாரளித்த எப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். அதேபோல செல்போனின் மாடல், ஐஎம்இஐ(IMEI) எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். தகவல் சரியாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் செல்போன் முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது