வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. “இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது. வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது