• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Jul 23, 2023

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நடத்தினர்.

அதில் பேரணியில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடைபெற்று அதில் 17 பேர் பலியாகினர்.

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் 24 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள செல்கிறேன் மாலைமூன்று மணி அளவில் நெல்லை ஜங்ஷனில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறேன்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் 17 பேருக்கு நினைவு இடம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுத்த வர வேண்டும்.

மாஞ்சோலை எஸ்டேட்டில் 8400 ஏக்கர் நிலத்தை 99 குத்தகை ஓரிரு ஆண்டுகளில் முடியும் நிலையில் உள்ளது அதனை மீட்டு தமிழக அரசு அங்குள்ள தொழிலாளர்களுக்கு காய்கறி மற்றும் விவசாயம் செய்து கொள்ள 2 1/2 ஏக்கர் வழங்க வேண்டும் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமை பற்றிய கேள்விக்கு?

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மிகவும் கண்டனத்திற்குரியது இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள்தான் நடக்காமல் இருக்க ஒரு கமிட்டி அமைத்து விரைவு சிறப்பு நீதிமன்ற ஆணையம் அமைக்க வேண்டும்.

மணிப்பூரில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பேசுகிறோம் மற்றபடி அந்த சம்பவம் பற்றி பேச மறந்து விடுகிறோம். 19 மதுபான ஆலைகளில் 17 ஆலை திமுக வினருடைது. மரக்காணத்தில் நடைபெற்ற சாராய 22 பேர் தலையணர் இது குறித்து திமுகவினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
.
தமிழகத்தில் நடைபெற்று வரும் nia சோதனை குறித்த கேள்விக்கு,

NIA சோதனை நடைபெற வேண்டிய ஒன்றுதான் அந்நிய நிதியுதவியால் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும்.

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கர்நாடகா வழங்க வேண்டிய ஜூன் மாதம் இரண்டு டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் மற்றும் உபரிநீராக முப்பது டிஎம்சி தண்ணீர் வழங்கவில்லை இது குறித்து முதல்வர் எதுவும் கூறவில்லைஆனால் மோடிக்கு எதிராக திமுகவினர் பேசி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர்கர்நாடகாவில் தண்ணீர் தர மறுக்கின்றனர் உச்சநீதிமன்றம் காவிரி ஆணையம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுக்கின்றனர் அவர்களோடு கைகோர்க்கின்றனர்.

மதுக்கடைகளில் காலை மது அருந்துபவர்கள் குடிகாரர்கள் அமைச்சர் பேசியதற்கு?

ஏழு மணிக்கு குடிப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல குடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள் செல்லாமல் இருப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல அக்கம் பக்கத்தில் பிரச்சனை பண்றவர்கள் குடிகாரர்கள் அல்ல. இருக்கக்கூடியவர் அதுவும் முதிர்ந்த அமைச்சர் முத்துசாமி போன்றோர் பொறுப்பு வாய்ந்தவர் கண்ணியமிக்கவர் இப்படி ஜோக் அடிக்க கூடாதுமது பழக்க வழக்கத்தை ஒழித்தால் தான்இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் சுயலாபத்திற்காக தான் மதுபான கலையில் நடைபெறுகின்றன.

சபாநாயகர் அப்பாவோ வின் ராதாபுரம் தொகுதியில்கடைகளுக்கு அப்பாற்பட்டு துகியில் மதுவை குளித்து வருகின்றனர் இது குறித்து செய்தி வந்துள்ளது.

நாங்கள் இணைந்து தான் மது ஒழிப்பிற்கு போராடி வந்துள்ளோம் 2016 கலைஞர் தலைமையில் தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என கோரித்தான் பிரச்சாரம் செய்தோம். தேர்தல் அறிக்கையில் கலைஞரே அறிவித்தார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். மது ஒழிப்பு பிரச்சாரத்தில் சசிகுமார் உயிரிழந்தார். மது உணவு மல்ல. மருந்தும் அல்ல அது 220 நோய்களை உருவாக்குகிறது.

மது ஒரு விஷம். அது காலையில் சாப்பிட்டாலும், மதியம் சாப்பிட்டாலும் மாலையில் சாப்பிட்டாலும் விஷம் கேடு விளைவிக்கும்.

எதிர்கட்சிகளின் கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த கேள்விக்கு

‘புலியை கண்டு பூனைகள் பயப்படலாம் பூனையைக் கண்டு புலிகள் பயப்படுமா’

செய்தியாளர்கள் பாஜகவை பூனையா, புலியா என்ற கேட்ட கேள்விக்கு ?

நீங்களே முடிவு சொல்ல செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு கிருஷ்ணசாமி திருநெல்வேலி புறப்பட்டார்.