• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் கடல் ஆமைகளை பாதுகாக்க புதிய திட்டம்

கன்னியாகுமரியில் செயற்கையாக பொரிக்க வைக்கப்பட்டு ஆமை குஞ்சுகள் கடலில் பத்திரமாக விடப்பட்டன. கடல் சூழலலில் முக்கிய பங்காற்றும் அழிந்துவரும் கடல்ஆமைகளை பாதுகாக்க கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் வழிகாட்டுதலின்படி துவாரகாபதி மற்றும் முருங்கவிளை கடற்கரை பகுதிகளில் கடல்ஆமை பொரிப்பகங்கள் நிறுவப்பட்டு கன்னியாகுமரி இயற்கை பாதுகாப்பு தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து ஆமை முட்டைகளை பாதுகாப்பாக பொரிக்க வைப்பதற்காக சேகரிக்கப்பட்டு வந்தன.முருங்கவிளை பகுதியில் இதுவரை 1204 பங்குனி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 122 பங்குனி ஆமைக்குஞ்சுகள் பொரிந்து வெளிவந்தன. அவை முருங்கவிளை கடற்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.