• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகர புதிய காவல் ஆணையர் நடவடிக்கை !!!

BySeenu

Jan 20, 2026

கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சிங்காநல்லூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும், வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பெரிய கடைவீதி விசாரணை பிரிவுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் சுந்தராபுரத்துக்கும், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கரும்புக்கடை இன்ஸ்பெக்டராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

காத்து இருப்போர் பட்டியலில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் மாநகர குற்ற பிரிவு 2 க்கும், சகிலா மாநகர குற்றப்பிரிவு 1 க்கும், ராஜசேகரன் சிங்காநல்லூர் சட்ட – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ராஜசேகர் ரேஸ்கோர்ஸ் விசாரணை பிரிவுக்கும், கண்ணன் குனியமுத்தூர் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சாரதா வடவள்ளி இன்ஸ்பெக்டராகவும், மணிவண்ணன் பீளமேடு விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பிரகாஷ் வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், விஜயேந்திரன் சிங்காநல்லூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ண லீலா உக்கடம் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், வெங்கடேசன் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர் கூடுதலாக காட்டூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுவார்.

மாநகர குற்றப்பிரிவு 1 இன்ஸ்பெக்டராக நிர்மலா போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு கிழக்கும், ஈரோட்டில் பணியாற்றிய பூரண சந்திரன், பாரதி மேற்கு மகளில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், பிரபா மத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணையன் குனியமுத்தூர் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கட்டுப்பாட்டு அறைக்கு காத்து இருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.