• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா அழைப்பிதழ் வெளியானது

ByA.Tamilselvan

May 27, 2023

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்கள் உட்படப் பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை நாளை மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்கள் உட்படப் பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையில் 888 உறுப்பினர்கள் அமரும் வண்ணமும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பட்ட நிலையில் அழைப்பிதழில் குடியரசு தலைவர் பெயரோ,அவருக்கான அழைப்பிதலோ அனுப்பபட வில்லை என கூறப்படுகிறது..குடியரசு தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்கவேண்டும் என 19 எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன நிலையில் நாளை திறக்கப்பட உள்ள கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.