• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா..! அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு…

ByG.Suresh

Nov 30, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நேரு பஜாரில் ரூபாய் 3.49 கோடி மதிப்பில் 6400 சதுர அடியில் புதிய தினசரி மார்கெட் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிவகங்கையில் புதிய மார்க்கெட் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடர்பான பூமி பூஜை நடைபெறுகிறது. இதில் காய்கறி கடைகள், கேன்டீன் உட்பட 100 கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் சிவகங்கை நகராட்சிக்கு மேலும் வருவாய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன், சரவணன், கீதா கார்த்திகேயன், ராஜபாண்டி, விஜயகுமார், நகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.