நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்பகுவதை தடுக்கும் வகையில் புதிய கடைமடை தடுப்பணை ரூ.49 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரம் கிராமத்தில் தடுப்பணை கட்டுவதால் உத்தமசோழபுரம், நரிமணம், வடகரை, பூதங்குடி, பாலக்காடு, வடக்குடி, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட 32 கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு சாகுபடி நிலங்கள் உப்புத் தன்மையுடன் மாறி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கடல் நீர் உட்பு நீர் புகுவதால் இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கபடும் என்றும் ஏற்கனவே அப்பகுதியல் தனியார் இரால் பண்ணைகள் செயல்பட்டு வருவதால் சுற்றுசூழல் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது.
இதை தடுக்கவே அப்பகுதிக்கு விவசாயிகள் போராடி தடுப்பணை கொண்டு வந்ததாகவும் தற்போது தடுப்பணை வந்த நோக்கத்தை கெடுக்கும் வகையில் வேறு இடத்தில் கட்டப்பட்டு வருவதை நிறுத்தி கடல் மட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூதங்குடி பகுதியில் தடுப்பணையை கட்ட வேண்டும் என 32 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆற்று நீரை தடுத்து தடுப்பணை கட்டும் பணிகள் மும்முறமாக நடைப்பெற்று வருகிறது.
இதனை கண்டித்து 32 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இன்று வேலையை தடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் அணை கட்டும் பகுதியான உத்தமசோழபுரத்திற்கு பெண்கள் கிராம மக்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் 1000 த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்ததனர். இதனால் காலை முதலே அந்த பகுதியில் 500 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
மேலும் ஆங்காங்கே சாலைகளில் பேரிகார்டர் அமைத்து கிராம மக்களை அணைகட்டும் பகுதிக்கு செல்லவிடாமல் போலிசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் சாலையில் திரண்ட பெண்கள் , பொது மக்கள், விவசாயிகள், தடுப்பணையை கட்டும் பணியை நிறுத்த வேண்டும். கடல் மட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் உள்ள பூதங்குடியில் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
இதனால் நாகூர் திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போலிசார் போராட்டக்காரர்களை கைது செய்து காவல் வாகணத்தில் ஏற்றி சென்றனர் இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.