• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

60வயதுக்கு மேற்பட்டோருக்கான புதிய ஆரோக்கிய உடற்பயிற்சி மையம் துவக்கம்

BySeenu

Aug 24, 2024

கோவை சாய்பாபா காலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது.
இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பாதிப்புகளான, நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும், மேல வயது மூப்பு காரணமாக ஏற்படும் இரத்தகொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் தீர்வுகாணபடும் என இதன் பயிற்ச்சி மையம் உரிமையாளர் பெருமாள் தெரிவித்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் உலக நாடுகளில் இதே போல் பயிற்சி மையம் பல செயல்பட்டு வருவதாகவும், ஆனால், இந்தியாவில் இந்த உடற்பயிற்ச்சிக்கான போதுமான விழிப்புணர்வு இல்லை எனவும், இந்த வகை உடற்பயிற்சியானது இந்தியாவில் புதிய முயற்ச்சியாக இருக்கும் என தெரிவித்தார்.