• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதிதாக தீயணைப்பு நிலையம்

Byகுமார்

Oct 7, 2024

தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் ரூ.271.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மதுரை மண்டல துணை இயக்குநர் ந.விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் த.வெங்கட்ரமணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.