வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து பெங்கல் புயலாக உருவாக்கக்கூடும். இதன் காரணமாக வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அரசு அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : வெளுத்து வாங்கப் போகும் கனமழை








