இராஜபாளையம் தொகுதியில் சொக்கர்கோவில் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன் IAS தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்,
அதனைத்தொடர்ந்து, இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் (SH41) முதல் தென்காசி ரோடு (NH744) அரசு மருத்துவமனை வரையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக இணைப்புச்சாலை அமைக்கும் பணிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆசையை நிறைவேற்ற, மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்,

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தை அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 11.09.2008 ம் அன்று திறந்து வைத்தார், அப்போது தென்காசி ரோட்டிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைத்தால் சிறப்பாக இருக்குமென அப்போது மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டார், அதற்கான பணி தொடங்கப்படும் முன்னே ஆட்சி மாற்றம் நடைபெற்றது, அதன்பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் இப்பணிகளை துரிதப்படுத்தியும், இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினராக S.தங்கப்பாண்டியன்.,MLA பொறுபேற்றது முதல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் 2018 ம் ஆண்டு முதல் 2023 வரை தொடர் ஆய்வு மேற்கொண்டும் வருவாய்த்துறை அமைச்சர்களின் அலோசனையின்படியும் அவர்களது தொடர் ஆய்வு மூலம் அவர்களின் பரிந்துரையின்படி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு 25.06.2024 ல் நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தொடரில் இணைப்பு சாலை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் அதற்கான நிலம் கையெகப்படுத்தி பணியை துரிதப்படுத்தி இணைப்புச்சாலை அமைக்கும் பணிக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ராணிஸ்ரீகுமார் MP, S.தங்கப்பாண்டியன் MLA , தனுஷ் M.குமார் Ex.MP நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா ,பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன், ஜெயமுருகன் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கப்புலிஅண்ணாவி, மாவட்ட மகளிரணிஅமைப்பாளர் P.சுமதிராமமூர்த்தி, துணைசேர்மன் கல்பனாகுழந்தைவேலு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு கிளைக்கழக செயலாளர்கள், அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்