• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கொரோனா புதிய பாதிப்பு 3,375 ஆக சரிவு

ByA.Tamilselvan

Oct 2, 2022

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பதும்,குறைவதுமாக இருந்துவரும் நிலையில் இன்று சற்றே சரிந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,805 ஆக இருந்த நிலையில், இன்று 3,375 ஆக சரிந்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 487 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 4,206 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 28 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 37,444 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 849 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நேற்று 26 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் விடுபட்ட 11 மரணங்கள் உள்பட மேலும் 18 பேர் இறந்துள்ளதாக கூறி உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,673 ஆக உயர்ந்துள்ளது.