• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ByR. Vijay

Apr 27, 2025

பிரசித்திபெற்ற நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியம்மனுக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்தப் பாலபிஷேகமானது மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் மே 11ம்தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.