• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

நாகை பொதுக்கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் பேட்டி…

ByR. Vijay

Apr 27, 2025

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் நாகையில் பேட்டி அளித்துள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக்கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழுவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முஜிபுர் ரஹ்மான்.,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டெல்டா மாவட்டங்கள் சார்பில், செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், ஒன்றிய அரசு பலகினமாக உள்ளதால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக முன்பு புல்வாமா நடைபெற்றதாகவும், தற்பொழுது 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வக்பு போர்டு சொத்து தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் சார்பில் 1 மாத விழிப்புணர்வு போராட்டம், தெருமுனைப் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் கால வாக்குறுதியில் ஒன்றான சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு குறித்து கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும், 3.5 சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாக இட ஒதுக்கீட்டை வரும் 2026 தேர்தலுக்குள் உயர்த்த வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு அதிகரிக்கா விட்டால் தேர்தலில் அதன் விளைவுகள் எதிரொலிக்கும் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.