• Sun. Apr 28th, 2024

கனமழை எதிரொலியால் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

Byவிஷா

Dec 9, 2023

இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் வெள்ள பாதிப்பால் அவதி அடைந்து வருகின்றனர். அதனால் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் வெள்ள பாதிப்பினால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் 4 மாவட்டங்களிலும் இன்று ஐந்தாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விட்ட நிலையில் வரும் 11ம் தேதி பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று சனிக்கிழமை பள்ளிகளை திறக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *