• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை .. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

Byகுமார்

Aug 31, 2022

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக முதல்வர் ஸ்டாலின் பேசும் போது 8 வழி சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்ய தான் சொன்னார். திமுக இந்த திட்டத்துக்கு எதிரி அல்ல. போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவு படுத்தி தான் ஆக வேண்டும். நிலங்களை எடுத்து தான் ஆக வேண்டும். 8 வழி சாலை திட்டம் வேண்டும் என எங்கும் நான் பேசவில்லை. ஒன்றிய அரசின் திட்டம் இது. நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்து அதிமுக அரசு பேசவில்லை. அதை செய்ய தான் சட்டமன்றத்தில் சொன்னோம்.8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு. சாலை அமைக்கப்படுமா இல்லையா என அரசு தான் அறிவிக்கும். நான் பேசிய கருத்து தவறாக திரித்து கூறப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.