

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ஒன்றிய அரசின் செயலை விட ஒரு படி மேலே போய், தனக்கு அதிகாரம் இருந்தால் நீட்டே இல்லாமல் செய்வேன் என்கிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார பேச்சுக்கும், நீட் தேர்வுக்கும் எதிராக தி. மு. க.வின் சார்பில் (மதுரை) நீங்கலாக தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரில்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் மாநிலம் தழுவிய அறவழியில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் ஒன்றிய அரசையும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து நடை பெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் மாநிலங்கள் அவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஃப்.எம்.இராஜரெத்தினம், நகர ஒன்றிய செயலாளர்கள் மாநகராட்சி பேரூராட்சி, ஒன்றிய உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு பெருப்பாளார்கள் என தி மு கவின் அனைத்து நிலையினையும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று ஒன்றிய அரசின் “நீட்” தேர்வு நிலைப்பாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

