

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் தனியே தவம் மேற்கொள்ள வந்த காலத்தில், கன்னியாகுமரி அதன் சுற்றுப் புறத்தில் கால் நடையாக சென்ற போது,விவேகானந்தர் கண்ணில் பட்ட காட்சி, சுவாமிதோப்பு பகுதியில் சென்ற ஆண்கள் எல்லாம் ஒருவர் விடாமல் தலைப்பாகை அணிந்து சென்றதை பார்த்த சுவாமி விவேகானந்தர் அது குறித்து அந்த பகுதியில் விசாரித்தாராம்.
அப்போது தான் அவருக்கு தெரிந்த தகவல் முத்துகுட்டி என்னும் வைகுண்டர் தோற்றுவித்த “அய்யா”வழிபாட்டு முறையில் இறை சன்னிதானத்திலும் ஆண்கள் “தலைப்பாகை”அணிந்து இறைவனை வழிபாடு செய்வதை தொரிந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் அன்று முதல் தான் தலைப்பாகை அணிவதை வாடிக்கையாக கொண்டாராம்.
கன்னியாகுமரி கடற்பாறையில் மூன்று நாட்கள் அவரது தவத்திற்கு பின், மன்னர் சேதி பதிக்கு அமெரிக்கா சிக்காகோ மகநாட்டிற்கு வந்த அழைப்பை, மன்னரே முன்வந்து மாநாட்டிற்கு மன்னர் சேதுபதி செல்லாது விவேகானந்தரை அனுப்பி வைத்ததும், சிக்காகோ பொது நிகழ்வுகளில் உறையாற்றுவோர் சீமான் க்ளே, சீமாட்டி க்ளே என்று உறை தொடங்குவது என்பது வாடிக்கை.
சுவாமி விவேகானந்தர் உறையை தொடங்கிய விதம் சகோதர, சகோதிரிகளே என பேச்சை தொடங்கியதும், அரங்கம் முழுவதும் “கை” ஒலியின் ஓசை சில நொடிகள் தொடர்ந்து ஒலித்ததாம். (பல்லாண்டுகளுக்கு முன் அமெரிக்கா சிக்காகோவில் சுவாமி விவேகானந்தரின் பேச்சு சமூக வலை தளங்களில் வெளியான நிலையில் அதன் பின்னணி செய்திகளுடன் அனுப்பபியுள்ளேன்).