மதுரை மாநாட்டில் சர்வ சமய பெரியோர்களால் பட்டம் வழங்கப்பட்டது.
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டுத் திடலில், மதுரையில் உள்ள சர்வ சமய பெரியோர்களால் புரட்சித் தமிழர் என்ற பட்டம் சூட்டும் நிகழ்ச்சியில் கூறியதாவது, கடந்த நான்கரை ஆண்டு காலம் தமிழ்நாட்டிற்கு எடப்பாடியார் செய்த சாதனைத் திட்டங்களான குடிமராமத்து திட்டம், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், 7.5 சகவீத இட ஓதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பாராட்டி, தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்று வாழ்த்தி அவருக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை சூட்டி அதற்கான சான்றிதழை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாநாட்டில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் காத்திட்டு எங்களையும் காத்து வரும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.