மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,
2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்பினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக, மதுரை மாநகராட்சி 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவியர்களில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பு நுழைவு தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்பினை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்,
மேயர், ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து நீட் பயிற்சிக்கான புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
இப்பயிற்சியில், 30 மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற உள்ளார்கள். இப்பயிற்சி சி.இ.ஓ.ஏ. பதின்ம குழு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வாரத்தின் ஒரு நாள் சனிக்கிழமைக்தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி இன்று முதல் துவங்கப்பட்டு நீட் தேர்வு நடைபெறும் வரை தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.

இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1 மாணவியும், ஈ.வெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10 மாணவிகளும், கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 3 மாணவிகள், மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6 மாணவிகள், பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3 மாணவிகள், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3 மாணவிகள், திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 4 மாணவ, மாணவிகள் என, மொத்தம் 30 மாணவ, மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசிரியர் சண்முகத்திருக்குமரன், மாமன்ற உறுப்பினர் வசந்தாதேவி, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாநகராட்சி அலுவலா;கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.