• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு… அமைச்சர் மூர்த்தி மீது நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு!

ByP.Kavitha Kumar

Jan 16, 2025

மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அந்த பகுதி மக்களின் மாடுகளையும்,  மாடுபிடி வீரர்களும் புறக்கணிக்கப்படுவதாக கூறி நேற்று (ஜனவரி 15) அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், இன்று (ஜனவரி 16) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இன்று சமூகமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது, அமைச்சர் மூர்த்தி ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக, தலித் சமூக மக்கள் கடும் குற்றச்சாட்டுளைத் தெரிவித்தனர்.  திமுக அரசின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியில்  சாதிய பாகுபாடு காட்டுவதாக கூறி பாலமேடு கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் தலித் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் சாதிய பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி மீது  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில். “இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும், திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தமிழரசனை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று தமிழரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன்?” என்று வினா எழுப்பியுள்ளது