சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.
திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர்
அதனால்அவர்களுக்கு ஏற்பட்டவலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த அந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் ஒரு பிரதிநிதியாக ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்வியலைப் பேசும் படம் நெடுமி’
எப்படிக் காளைகளைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு இயக்கமாக உருவெடுத்ததோஅதுபோல் நமது ஆதி பண்பாட்டின் தொடர்ச்சியாக நம் கண் முன் உயிர் சாட்சியாக நிற்கும் பனை மரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டியது கடமையாகிறது. ஊருக்கு ஊர் எல்லை காப்பான்களாக நின்று கொண்டு கற்பக விருட்சம் போலப் பலனைத்தரும் பனைமரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கருத்தைவலியுறுத்துகிறது நெடுமி
இப்படத்தை நந்தா லக்ஷ்மன் எழுதி இயக்கியுள்ளார்.கண் முன் கண்ட கதையையும் வாழ்வியலையும் மனதில் பதியம் போட்டு திரை நுட்பம் கலந்து நெடுமி படமாக உருவாக்கியுள்ளார்.இப்படத்தில் நாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார் .நாயகியாக அபிநயா நடித்துள்ளார். இவர்கள் தவிர பிரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி, நடித்துள்ளனர். உதவி இயக்குநர் தினேஷ் டேவிட், முரளிதரன் வெங்கடேசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.





குட்டிப் புலி படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் இயக்குநர் நந்தா லக்ஷ்மன். அந்த ஊருக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் என்கிற கிராமம் கதைக்குப் பொருத்தமாக அமையவே முழு படத்தையும் அங்கேயே முடித்துள்ளார்கள்.
மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களது வலிகள் என்ன? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் வகையில் இந்தக் கதை உருவாகியுள்ளது.இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளவர்
ஜாஸ் ஜே. பி.விஷ்வா மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் நந்தா லக்ஷ்மன் பேசும்போது,”பனை மரங்களைச் சார்ந்து வாழ்க்கை நடத்திய 10 லட்சம் குடும்பங்கள் இன்று மிகவும் சிரமத்துக்குள்ளாகி சொல்ல முடியாத சோகத்தை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
அரசின் கள் இறக்கத் தடை சட்டத்தால் இவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட வலி அவர்களுக்குள் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வலியைத் திரைப்படத்தில் பதிவு செய்யும் முயற்சி தான் இது.சொல்லத் தயங்கி சொல்ல மறந்த அந்த வலியை நான் ஒரு படமாக எடுத்துள்ளேன். திருப்தியாக வந்துள்ளதாக நம்புகிறேன்.இந்தப் படத்தைப் பத்து முறை நாங்கள் நண்பர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். படத்தைப் பற்றி பலரும் விமர்சித்தாலும் பல்வேறு கருத்துக்கள் சொன்னாலும் 80% பேர் படத்தில் ஓர் உயிரோட்டம் உள்ளது என்று பாராட்டினார்கள். அந்தப் பாராட்டு தான் எங்களை முன்னகர்த்திக்கொண்டு செல்லும் சக்தியாக இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருக்கலாம், இன்னும் செலவு செய்து பிரமாண்டமாக எடுத்திருக்கலாம் என்று பலரும் பலவிதமாகச் சொன்னாலும், அந்த உயிரோட்டம் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். இதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை அளித்தது.ஒரு திரைப்படத்திற்கு தேவையானது அந்த நம்பிக்கைதானே?
சினிமா பற்றிய கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்கள் கரம் கோர்த்து ஒரு குழு முயற்சியாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் தனிநபர் யாரும் உரிமை கொண்டாடாத அளவிற்கு கூட்டாக, குழுவாக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார் இயக்குநர்.இப்படத்தை ஹரிஷ்வர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எம். வேல்முருகன் தயாரித்துள்ளார்
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]