• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வை எப்போதும் அதிமுக எதிர்க்கும்! – ஓபிஎஸ்

Byகுமார்

Feb 6, 2022

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில், மதுரை கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, பாஸ்கரன், வைகை செல்வன், மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் மணமக்களை வாழ்த்திய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அதிமுகவை பொறுத்தவரையில் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

நேற்றும் எதிர்த்தோம் இன்றும் எதிர்த்து வருகிறோம். நாளையும் எதிர்ப்போம். நீட் தேர்வு என்பது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டு உள்ளது.’ என்றார்!