• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே, 2 மகள்களுடன் தாய் மாயம்..!

ByKalamegam Viswanathan

Jul 6, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேஈ 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36). இவரது மனைவி அழகுலட்சுமி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன், சிவகாசி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கணவருடன் கோபித்துக் கொண்ட அழகுலட்சுமி, தனது இரண்டு மகள்களுடன் கடந்த 1ம் தேதி, வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஜெகநாதன், மனைவி மற்றும் மகள்கள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காணாமல் போன மூன்று பேரையும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி, 2 மகள்கள் காணாமல் போனது குறித்து ஜெகநாதன், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.