• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே.குலசேகரன் கோட்டையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ByKalamegam Viswanathan

May 2, 2023

மதுரை வாடிப்பட்டி அருகே.குலசேகரன் கோட்டையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இயற்கை எழில் கொஞ்சும் சிறும லை அடிவார ஓடைக்கரையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. இந்த திருமண வைபவத்தில் சொக்கநாதர் வெண்பட்டு உடுத்தியும், மீனாட்சி அம்மன் பச்சை கலர் மேலாடையும் ஆரஞ்சு கலர் பட்டு சேலையும் அணிந்திருந்தார். இதில் காலை 8.59 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் நிற மங்கள நான் அணிவிக்கப்பட்டது.இதில் மீனாட்சியாக கார்த்திக் பட்டரும் சொக்கநாதராக குமார் பட்டரும் மாலை மாற்றிதிருக்கல்யா ணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணத்தின் போது பெண்கள் தங்களது கழுத்தில் புதியமஞ்சள் கயிற்றை அணிவித் து கொண்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்..