மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா ஆரம்பம். ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொலு பொம்மைகளை பார்த்து சென்றனர்.
நவராத்திரி திருவிழாவில் நாள்தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார். விழாவின் முதல் நாளான (ஆக.3) சந்தன மாரியம்மன் இராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரண்டாவது நாளான (ஆக.4) வெள்ளிக்கிழமை சந்தன மாரியம்மன் இராஜ மாதங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, நேற்று கோவில் மண்டபத்தில் கொழு பொம்மைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஊமச்சிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்
பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வருகை தந்து கொழு பொம்மைகளை பார்த்து சென்றனர். நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கொளு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு 9 வது நாளில் சந்தன மாரியம்மன் திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சந்தன மாரியம்மன் அலங்காரத்தை சிவஸ்ரீ ராஜா குருக்கள் சிறப்பாக செய்திருந்தார்.